மேலூர் அருகே லாரி டிரைவர் மர்ம மரணம்

லாரி டிரைவர் கண்மாய் கரையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார் கொடுத்துள்ளார்.
மரணம்
மரணம்
Published on

மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கரையிபட்டியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் சர்க்கரை முகமது (வயது 35), லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

சம்பவத்தன்று சக்கரை முகமது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் கீழையூர் பகுதியில் உள்ள ஊரணி கண்மாய் கரையில் சர்க்கரை முகமது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிள் அருகிலேயே நின்றது.

அவர் எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து கீழவளவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வசந்தி, ஏட்டு பரசுராமன் ஆகியோர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக சாகுல் ஹமீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com