மேலூர் அருகே விவசாயி வீட்டில் நகை கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து 1½ பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

மேலூர்:

மேலூர் அருகே உள்ள திருவாதவூர் பைபாஸ் பாலம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 49) விவசாயி.

இவர் நேற்று அதிகாலை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுவிட்டார். இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் வீடு பூட்டப்பட்டு இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பிரோவில் இருந்த 1½பவுன் நகை, வீட்டில் இருந்த கணினி மற்றும் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.

வயலுக்கு சென்று வீடு திரும்பிய சிவக்குமார் வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிகிடந்தது.

இதுகுறித்து மேலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாதவூர் பை-பாஸ் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு கொள்ளை சம்பவம் நடந்து இருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com