மேலப்பாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில், மேலப்பாளையம் ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நெல்லை:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில், மேலப்பாளையம் ரவுண்டானா அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலப்பாளையம் பகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். கட்சியின் நாடாளுமன்ற செயலாளர் அரசு.பிரபாகரன், ஊடக மைய நிர்வாகி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக திட்டமிட்டு அவதூறு பரப்புவதை பா.ஜ.க. நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

நிர்வாகிகள் பாஸ்கர், ஜெயக்குமார், செல்வராஜ், சங்கரன், தங்கபாண்டியன், மணி, அரவிந்த், செல்வன், பாலசுப்பிரமணியன், இசை செல்வம், முகிலன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com