மெஞ்ஞானபுரம் அருகே தொழிலாளி மாயம்

மெஞ்ஞானபுரம் அருகே தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி மாயம்
தொழிலாளி மாயம்
Published on

திருச்செந்தூர்:

மெஞ்ஞானபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேல் மகன் முத்துகுமார் (வயது34). இவர் சாத்தான்குளத்தில் உள்ள கியாஸ் கம்பெனியில் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ரேகா (32) என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கியாஸ் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் இதுவரை வீட்டுக்கு திரும்பவில்லை. அக்கம் பக்கம் தேடியும் காணவில்லை. இது குறித்து அவரது மனைவி மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com