மேகாலயா முதல்வரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மேகாலயா முதல்வர் கான்ரட் சங்மாவின் பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயா முதல்வரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Published on

இம்பால்:

மேகாலயா முதல்வர் கான்ரட் சங்மாவின் பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா புதிய முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், கான்ரட் சங்மாவின் பாதுகாவலர் ஒருவர் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது பெயர் எலாங்பம் சாந்திகுமார் சிங் எனவும், ஒரு தனியார் ஹோட்டலில் வைத்து இன்று அதிகாலை 3:15 மணியளவில் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வரின் பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com