

ஷில்லாங்:
மேகாலாயா மாநிலத்தில் 60 சட்டமன்ற தொகுதிளுக்கான தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி தொடங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை மார்ச் 3-ம் தேதி நடக்கிறது.
இந்நிலையில், தொடர்ந்து 10 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக பதவி வகித்துவரும் முகுல் சங்மா இந்த தேர்தலில் முதல்முறையாக இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஷாங்சக் மற்றும் அம்பதி தொகுதிகளில் அவர் போட்டியிட உள்ளார். முகுல் சங்மா உட்பட ஷாங்சக் தொகுதியில் 7 வேட்பாளர்களும், அம்பதி தொகுதியில் 3 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலில் 33 பெண் மற்றும் 85 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 374 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #tamilnews