வாஜ்பாய் மறைவு எதிரொலி - ரபேல் குறித்த ஆலோசனை கூட்டத்தை இன்று ஒத்திவைத்தது காங்கிரஸ்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி சடங்கை முன்னிட்டு, இன்று நடைபெறவிருந்த ரபேல் போர் விமானம் தொடர்பான காங்கிரஸ் கூட்டத்தை ராகுல் காந்தி ஒத்திவைத்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #Congress
வாஜ்பாய் மறைவு எதிரொலி - ரபேல் குறித்த ஆலோசனை கூட்டத்தை இன்று ஒத்திவைத்தது காங்கிரஸ்
Published on

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருபவர் ராகுல் காந்தி. பாஜக ஆட்சியில் நடைபெற்ற ரபேல் போர் விமானம் தொடர்பான ஊழல் குறித்து ஆலோசிக்கவும், ரபேல் போர் விமானம் தொடர்பான உண்மை நிலையை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இன்று மதியம் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்தது.

இதற்கிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை டெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வாஜ்பாயின் இறுதி சடங்கை முன்னிட்டு, இன்று நடைபெறவிருந்த ரபேல் போர் விமானம் தொடர்பான காங்கிரஸ் கூட்டத்தை ராகுல் காந்தி ஒத்திவைத்துள்ளார். இந்த கூட்டம் நாளை நடைபெறும் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #Congress

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com