மீன்சுருட்டி அருகே மது விற்றவர் கைது

மீன்சுருட்டி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன்சுருட்டி அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் காலனி தெருவை சேர்ந்த சங்கர்(வயது 50) என்பவர், வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து சங்கரை கைது செய்து, அவரிடம் இருந்து 5 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com