வள்ளியூர் அருகே மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறதா? - நெல்லை கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

வள்ளியூர் அருகே மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகிறதா என்பது தொடர்பாக நெல்லை கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வள்ளியூர் அருகே மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறதா? - நெல்லை கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு
Published on

சென்னை:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கல்குவாரிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதாகவும், இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதை மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், பேரூராட்சிகளின் இயக்குனர், நெல்லை கலெக்டர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத்துறை இயக்குனர் ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.   #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com