திருவெறும்பூர் அருகே வேன் டிரைவரை காதலித்து கரம் பிடித்த மருத்துவ மாணவி

திருவெறும்பூர் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி வேன் டிரைவரை கரம் பிடித்த மருத்துவ மாணவி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருவெறும்பூர்:

திருச்சி திருவெறும்பூர் அருகே செல்வக்குமரன் நகரை சேர்ந்தவர் ராதாபுலிகேசி. இவர் திரு வெறும்பூர் ஒன்றிய தி.மு.க. மகளிர் தொண்டரணி அமைப்பாளராக உள்ளார். இவரது மகள் காருண்யாஸ்ரீ ( வயது 23) . மருத்துவம் இறுதியாண்டு படித்துவரும் இவரும், வேங்கூர் தெற்கு தெருவை சேர்ந்த டிரைவர் சாம்புவின் மகன் வேன் டிரைவரான வீரமணி (24) என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். 

இவர்களது காதலுக்கு காருண்யாஸ்ரீ வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி சமயபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். காருண்யாஸ்ரீ காதல் கணவருடன் செல்வதாக கூறவே அவரை வீரமணியுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். 

மாணவியின் தாய் ராதா கூறுகையில், திருவெறும்பூர் ஒன்றிய தி.மு.க. மகளிர் தொண்டரணி துணைச் செயலாளராக உள்ள நான், ரியல் எஸ்டேட் , பத்திரம் எழுத்து பணி செய்து வருகிறேன். இதில் எனக்கும் குறிப்பிட்ட ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தொழில் போட்டியில் டாக்டருக்கு படித்து வரும் எனது மகளை வசியப்படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டனர். எனவே இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com