நோயாளிகளுக்கு ஊசி போட்ட மருந்துக்கடை உரிமையாளர் கைது

நோயாளிகளுக்கு ஊசி போட்ட மருந்துக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் குரு பாலமுருகன் (வயது 49). இவர் அரண்மனை தெருவில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் பெரியகுளம் நகராட்சி நகர்நல அலுவலர் தினேஷ்குமார் நேற்று பெரியகுளத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது குரு பாலமுருகன், தனது மருந்துக்கடையில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்ததுடன், ஊசி போட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் நகர்நல அலுவலர் தினேஷ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் குரு பாலமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com