டெங்கு காய்ச்சல் எதிரொலி - அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ இயக்குனர் டாக்டர் சுவாதி ரத்னா நேரில் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் எதிரொலியாக அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ இயக்குனர் டாக்டர் சுவாதி ரத்னா நேரில் ஆய்வு செய்தார்.
கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் உள்ள டெங்கு காய்ச்சல் பிரிவை டாக்டர் சுவாதி ரத்னா நேரில் ஆய்வு செய்தார்
கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் உள்ள டெங்கு காய்ச்சல் பிரிவை டாக்டர் சுவாதி ரத்னா நேரில் ஆய்வு செய்தார்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடும் காய்ச்சல் ஏற்பட்டு அந்தந்தப் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 45-க்கும் மேற்பட்ட நபர்கள் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளித்து பலர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். தற்போது 9 பேர் டெங்குகாய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் சுவாதி ரத்னா கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நேரில் வந்து திடீரென்று ஆய்வு செய்தார். பின்னர் கடலூர் அரசு ஆஸ்ப்த்திரியில் உள்ள காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பிரிவுகளை முழுவதும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நோயாளிகளுக்கு  படுக்கை வசதி உள்ளதா? மருந்துகள் தயார் நிலையில் உள்ளதா, அதிக அளவில் நோயாளிகள் வந்தால் இடவசதி உள்ளதா, காய்ச்சலில் வரக்கூடிய பொதுமக்களின் ரத்தப் பரிசோதனை உடனடியாக கண்காணிக்கப்படுகிறதா, நோயாளிகளுக்கு சிகிச்சை சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் டாக்டர்களிடம் முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com