சென்னை அரும்பாக்கத்தில் சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி மருத்துவ கவுன்சிலிங் தொடங்கியது

சென்னை அரும்பாக்கத்தில் சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு இன்று தொடங்கியது.
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட மாணவிகள்.
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட மாணவிகள்.
Published on

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவ முறை, ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு இன்று தொடங்கியது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசு இந்திய மருத்துவ வளாகத்தில் தேர்வுக்குழு அலுவலகத்தில் 1,038 மருத்துவ இடங்களுக்கு இன்று முதல் 29-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. அனைத்து சிறப்பு பிரிவுகளுக்கும் ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ள 1 முதல் 301 வரை காலையிலும் 302 முதல் 602 வரை மாலையிலும் கலந்தாய்வு நடைபெற விண்ணப்பத்து இருந்த மாணவ- மாணவிகள் தங்களது தர வரிசை எண்படி கலந்தாய்வில் பங்கேற்றனர்.

நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் தர வரிசை எண்: 603 முதல் 906 வரையிலும், மாலையில் 907 முதல் 1,200 வரையிலும் மாணவர்கள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

28-ந்தேதி சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையற்ற சுய நிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

மொழி சிறுபான்மையினர் மற்றும் மத சிறுபான்மையினர் மாணவர்களுக்கும், பொது பிரிவினருக்கும் தர வரிசை பட்டியல் 1 முதல் 151 வரை உள்ள மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com