இடஒதுக்கீடு வழங்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை -உச்ச நீதிமன்றம்

இடஒதுக்கீடு வழங்குவதற்கு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்றும், இடஒதுக்கீடு அளிக்கும் விதிமுறைகள் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தை மீறுவதாக உள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on

புதுடெல்லி:

கிராம புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி உள்ளது.

மருத்துவ உயர்ப்படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும், மாநில அரசுகள் இட ஒதுக்கீடு தருவதை தடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது என்றும், உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இட ஒதுக்கீடு அளிக்கும் விதிமுறைகள் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தை மீறுவதாக உள்ளதாகவும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் ஏற்கனவே இட ஒதுக்கீடு இருந்தால் இந்த தீர்ப்பு அதனை பாதிக்காது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறி உள்ளது. 

மாநில அரசு எடுக்கும் முடிவில் மருத்துவ கவுன்சில் தலையிட முடியாது என்ற உத்தரவின் காரணமாக கிராம புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் திருப்தி அடைந்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com