கிருமாம்பாக்கத்தில் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

கிருமாம்பாக்கத்தில் மருத்துவ கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருமாம்பாக்கத்தில் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது
Published on

பாகூர்:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி உபத்யாயா நகரை சேர்ந்தவர் கங்கா ரெட்டி. இவர் திருப்பதி தேவஸ் தானத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தம்பி பாஸ்கரின் மகனான மனீஷ் குமார் ரெட்டியை (23) சிறு வயதில் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக மனீஷ்குமார் ரெட்டி கிருமாம்பாக்கத்தில் சொகுசு விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படித்து வந்தார்.

தற்போது இறுதி ஆண்டு முடிவடையும் நிலையில் கடந்த சில நாட்களாக மனீஷ்குமார் ரெட்டி சரியாக கல்லூரிக்கு செல்வதில்லை.

இதுபற்றி கல்லூரி நிர்வாகம் கங்கா ரெட்டிக்கு போன் செய்து அவரது கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து கங்கா ரெட்டி புதுவை வந்து மனீஷ்குமார் ரெட்டியிடம் விசாரிப்பதாக கூறினார்.

இதனை அறிந்த மனீஷ்குமார் ரெட்டி மனமுடைந்தார். வளர்ப்பு தந்தை கண்டிப்பாரே என பயந்து போன மனீஷ்குமார் ரெட்டி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

விடுதி அறையில் தன்னுடன் தங்கி இருந்த நண்பர்களிடம் திருப்பதியில் இருந்து வளர்ப்பு தந்தை மற்றும் பெற்றோர் வருவதால் இங்கிருந்து சென்று விடுமாறு கூறினார். இதனை ஏற்று நண்பர்கள் அங்கிருந்து சென்று விட்ட னர்.

இந்த நிலையில் இன்று காலை வெகு நேரம் ஆகியும் மனீஷ்குமார் ரெட்டி தங்கி இருந்த விடுதி அறை திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழி யர்கள் அறை கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மனீஷ்குமார் ரெட்டி மின் விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது பற்றி கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மனீஷ்குமார் ரெட்டி எழுதிவைத்திருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் பெற்றோருக்கும், வளர்ப்பு தந்தைக்கும் நல்ல மகனாக நடந்து கொள்ளவில்லை. தங்கைக்கு நல்ல அண்ணனாக இருக்கவில்லை. இதனால் இவ்வுலகை விட்டு செல்கிறேன். குட்பை...

இவ்வாறு அந்த கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com