

சேலம்:
சேலம் திருவாச்சூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 27). சேலம் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். நேற்று இவர் விடுதி அறையை பூட்டிவிட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அறையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த 3 செல்போன் மற்றும் டேப் திருடப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜ்நாயக் என்பவர் விடுதியின் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று செல்போன் மற்றும் டேபை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து செல்போன் மற்றும் டேபை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ராஜ்நாயக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.