9 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றார் மேதா பட்கர்

கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் மேதா பட்கர், 9 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
பழச்சறு அருந்தி உண்ணாவிரதத்தை நிறைவு செய்த மேதா பட்கர்
பழச்சறு அருந்தி உண்ணாவிரதத்தை நிறைவு செய்த மேதா பட்கர்
Published on

குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் மதகுகளை மூடவும், அணையின் நீர்மட்டத்தை 138.68 மீட்டராக உயர்த்தவும் மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அணை திட்டத்தால் வெளியேற்றப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும் சமூக ஆர்வலர் மேதா பட்கர் கடந்த மாதம் 25-ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டம் சோட்டா பாத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். அவருடன் அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.

மேதா பட்கருக்கு ஆதரவாக பர்வானி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கிராமத்தினரும் போராட்டத்தில் குதித்தனர். அவரது போராட்டம் நேற்று 9வது நாளாக நீடித்தது. தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் மேதா பட்கரின் உடல்நிலை மோசமடைந்தது.

இந்நிலையில் நேற்று இரவு மாநில முதலமைச்சர் கமல் நாத் சார்பில் முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ்.சி.பெகர், மேதா பட்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் சமூக ஆர்வலர் ராஜேந்திர கோத்தாரியும் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com