மேச்சேரி அருகே திருமணம் ஆன 10 மாதங்களில் இளம்பெண் தற்கொலை

மேச்சேரி அருகே திருமணம் ஆன 10 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

மேச்சேரி:

மேச்சேரி தர்மபுரி சாலை சாம்ராஜ் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். டிரைவர். இவரும் மேச்சேரி தெப்பக்குள வீதி பகுதியைச் சேர்ந்த சவுந்தர்யா (வயது 22) என்பவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று மாலை சவுந்தர்யா வீட்டில் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மேச்சேரி போலீசில் சவுந்தர்யாவின் தந்தை வேல்முருகன் புகார் செய்தார். அதில், எனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேச்சேரி இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் மேட்டூர் உதவி கலெக்டர் சரவணன், மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com