கோபல் பக்லே பிரதமர் அலுவலகத்திற்கு மாற்றம்: வெளியுறவு செய்தித் தொடர்பாளராக ராவீஷ் குமார் நியமனம்

மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளராக இருந்த கோபல் பக்லே பிரதமர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு ராவீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோபல் பக்லே பிரதமர் அலுவலகத்திற்கு மாற்றம்: வெளியுறவு செய்தித் தொடர்பாளராக ராவீஷ் குமார் நியமனம்
Published on

புதுடெல்லி:

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த விகாஸ் ஸ்வரூப் கனடா நாட்டுக்கான இந்திய தூதராக மாற்றப்பட்டதை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் கோபல் பக்லே அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். பதவியேற்று 4 மாதங்கள் மாதம் மட்டுமே ஆன நிலையில் பக்லே அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக பக்லே நியமிக்கப்பட்டுள்ளார். ஜெர்மனி நாட்டுக்கான இந்திய தூதராக இருந்த ராவீஷ் குமார் புதிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் பயிற்சி துறை தெரிவித்துள்ளது.

விரைவில் தங்களது புதிய பொறுப்புக்களை இருவரும் ஏற்றுக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com