கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே தின விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மே தினவிழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே தின விழா கொண்டாட்டம்
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில இளைஞரணி செயலாளர் பாலாஜி தலைமை தாங்கி விழாவில் பங்கேற்றவர்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார். நூலகர் ரமேஷ் வரவேற்றார். மாநில இணை செயலாளர் நந்தகுமார், உழைப்பாளர் தினம் குறித்து பேசினார். இதில், பொருளாளர் கிருஷ்ணன், இணை செயலாளர் வெங்கடாசலபதி, செந்தில், ரவிக்குமார், சுரேஷ், பாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சங்க கொடியேற்றி, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் அரசு பொறியியல் கல்லூரி நேரு நன்றி கூறினார்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை ஆட்டோ ஸ்டேண்ட், புதுப்பேட்டை ஆட்டோ ஸ்டேண்ட், அரசு போக்குவரத்து கழக புறநகர் மற்றும் நகர் கிளை பணிமனைகள், புதுப்பேட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகியவற்றின் சார்பில் மே தினவிழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மோட்டார் வாகன பழுது பார்க்கும் பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நடந்த விழாவிற்கு மாநில பொருளாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பெரியசாமி சங்க கொடியை ஏற்றி வைத்தார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிர்வாக குழு உறுப்பினர் முனிராஜ் இனிப்பு வழங்கினார். முன்னதாக பாண்டியன் வரவேற்றார். முடிவில் சின்னசாமி நன்றி கூறினார்.

கிருஷ்ணகிரியில் தமிழக அமைப்புசாரா உடல் உழைப்பு தொழிலாளர் மாநில சங்கத்தின் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் இளஞ்சூரியன் சங்க கொடியை ஏற்றி வைத்து, மே தின வரலாறு குறித்து பேசினார். கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் மீனா, தேன்மொழி, சித்ரா, முனியப்பன், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்த மே தின விழாவிற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கி சுமைதூக்குவோர் நல சங்க பெயர் பலகையை திறந்து வைத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுபுத்தகங்கள், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

போச்சம்பள்ளியில் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் வஜ்ஜிரவேல் தலைமை தாங்கி சங்க கொடியை ஏற்றி வைத்தார். துணைத்தலைவர் சிவன் முன்னிலை வகித்தார். அரசு வரவேற்றார். இதையொட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் செயலாளர் ரவிக்குமார், துணை செயலாளர் மாரியப்பன், பொருளாளர் வேலாயுதம் உள்பட பலர் கலந்துகொண்டனர். பர்கூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று மே தினத்தை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

ஓசூரில் அனைத்து மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பழனி தலைமை தாங்கினார். கட்டுமான பிரிவு உதவி செயற்பொறியாளர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஓசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள மின் நகரில் சங்க கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தொழிற்சங்க பிரதிநிதிகள் வாசுதேவன், தேவராஜன், கருணாநிதி, சதீஷ்குமார் (சி.ஐ.டி.யு), சரவணன் (தொழிலாளர் முன்னேற்ற சங்கம்), ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

பின்னர் ஓசூர் தளி சாலையில் உள்ள நரேந்திரா நம்பிக்கை நட்சத்திர ஆதரவற்றோர் இல்லத்திலும், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள பெசோ ஆதரவற்ற குழந்தைகள் மையத்தில் உள்ள குழந்தைகளுக்கும் உணவு மற்றும் நல உதவிகள் வழங்கப்பட்டது. இதில் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், மின்வாரிய பணியாளர்கள், பிரிவு அலுவலர்கள், மின் ஒப்பந்ததாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சங்க நிர்வாகி கருணாநிதி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com