ஈரோட்டில் மே தின கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டத்தில் மே தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
ஈரோட்டில் மே தின கொண்டாட்டம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் மே தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி ஈரோடு மாநகரில் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் மே தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள். ஈரோடு மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கூட்டமைப்பு செயலாளர் முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

தலைவர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மே தின கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் விஜயகுமார், அசோக்குமார், சண்முகவடிவு, விஜயா மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் அமைப்பு செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.

இதேபோல் உழவன் மகன் விவசாயிகள் சங்கம் சார்பில் ஈரோடு-சத்தி ரோடு வாய்க்கால்கரை பகுதியில் மே தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சங்க தலைவர் மாதேஷ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் மணிகண்டன், பொருளாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் சங்க உறுப்பினர்கள் ஈஸ்வரன், செந்தில், சதீஷ், துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com