ஜம்மு-காஷ்மீர்: பானிஹால் பகுதியில் போலீசார் மீது நடத்திய தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பானிஹால் பகுதியில் போலீசார் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டான்.
ஜம்மு-காஷ்மீர்: பானிஹால் பகுதியில் போலீசார் மீது நடத்திய தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பானிஹால் பகுதியில் போலீசார் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டான்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பானிஹால் பகுதியில் உள்ள போலீசார் முகாம் மீது கடந்த 20-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தலைமை காவலர் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் பானிஹால் பகுதியில் பதுங்கிய 2 தீவிரவாதிகளை போலீசார் மடக்கினர். அவர்களை கைது செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், போலீசார் மீது நடத்திய தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். பானிஹால் பகுதியில் போலீசார் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த வாஹித் நாஜர் என்பவனை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவன் போலீசார் மீது நடத்திய தாக்குதலின் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது. அவனிடம் இருந்து சீன தயாரிப்பு துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன, தொடர்ந்து அவனிடம் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com