தெற்கு காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கல்: தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியது ராணுவம்

தெற்கு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தெற்கு காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கல்: தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியது ராணுவம்
Published on

ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை தாக்குதல்களை நடத்தி வரும் தீவிரவாதிகளால் அமைதியற்ற சூழ்நிலை காணப்படுகிறது. தெற்கு காஷ்மீரில் வங்கிகள் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையடித்துள்ளனர். சமீபத்தில் தீவிரவாத குழுவினர் கொண்ட வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோக்கள் தெற்கு காஷ்மீர் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.

இந்நிலையில் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட வியூகம் வகுக்கப்பட்டது. அதன்படி ஷோபியான் மாவட்டத்திற்குச் சென்ற பாதுகாப்பு படையினர், ஜைனபோரா பகுதிக்குட்பட்ட 6 கிராமங்களை சுற்றி வளைத்து மிகப்பெரிய தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். நேற்று நள்ளிரவு தொடங்கிய இந்த தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

சில பகுதிகளில் பாதுகாப்பு படையினரை பணி செய்ய விடாமல் சில குழுக்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால், தேடுதல் வேட்டை பாதிக்கப்பட்டுள்ளது. கல்வீசி தாக்குவோரை விரட்டியடிப்பதற்காக கூடுதல் பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com