மசினகுடியில் வியாபாரி தற்கொலை

மசினகுடியில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மசினகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மசினகுடியில் வியாபாரி தற்கொலை
Published on

மசினகுடி:

மசினகுடி தபால்நிலைய தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது57). வியாபாரி. இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக வேலைக்கு செல்ல முடியாததால் மாயார் சாலையில் சிறிய பெட்டி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். அத்துடன் மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை மசினகுடி பஜார் பகுதிக்கு வந்து டீ குடித்துவிட்டு தனது பெட்டி கடைக்கு சென்ற பாஸ்கர் கடைக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை கண்ட சிலர் உடனடியாக மசினகுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாஸ்கரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com