தா.பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்- 34 பேர் கைது

தா.பேட்டையில் மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் செய்தனர். இதில் 34 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

தா.பேட்டை:

தா.பேட்டை கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர்கள், மாதர் சங்கம், தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கையை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் ஒன்றிய செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சேகர், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். 

அப்போது பொதுத்துறைகளை விற்காதே, புதிய சாலை போக்குவரத்து சட்டத்தை அமல்படுத்தக்கூடாது, குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கோசமிட்டவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 12 பெண்கள் உள்பட 34 பேரை போலீசார் கைதுசெய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com