ஆர்.கே.நகரில் மக்கள் சேவகனான எனது வெற்றி நிச்சயம்: மருதுகணேஷ் பிரசாரம்

ஆர்.கே.நகரில் மக்கள் சேவகனான எனது வெற்றி நிச்சயம். நான் வெற்றிபெற்று தொகுதி மக்களுக்கு சேவை செய்வேன் என்று தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் பிரசாரத்தின் போது கூறினார்.
ஆர்.கே.நகரில் மக்கள் சேவகனான எனது வெற்றி நிச்சயம்: மருதுகணேஷ் பிரசாரம்
Published on

ராயபுரம்:

ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். 

வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமையில் வேட்பாளர் மருதுகணேஷ் இன்று காசிமேடு பகுதியில் வீடுவீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

தண்டையார் நகர்- விநாயகர் புரம் பகுதிகளில் வீடுவீடாக சென்று பெண்களின் காலில் விழுந்து உதய சூரியன் சின்னத்துக்கு மருது கணேஷ் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். அப்போது அவர் தொகுதி மக்களின் செல்லப்பிள்ளையான எனது வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று. மக்கள் சேவகனான எனது வெற்றி நிச்சயம். கூட்டணி கட்சிகளின் ஆதரவு மற்றும் தொண்டர்கள் பலத்தால் நான் வெற்றிபெற்று ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு சேவை செய்வேன் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com