மார்த்தாண்டம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே இரவிபுதூர்கடை பகுதியை சேர்ந்தவர் ரெனின் (வயது29), தொழிலாளி. இவரது மனைவி ரம்யா (23). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த பெர்தின் (25) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று ரெனின் வேலைக்கு சென்றிருந்தார். ரம்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பெர்தின் லெனினின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்த டி‌.வி‌., வீட்டு ஜன்னல், கதவுகளையும் அடித்து உடைத்துள்ளார். மேலும் ரம்யாவுக்குகொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து ரம்யா மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து பெர்தினை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com