கைது
கைது

மார்த்தாண்டம் அருகே மது விற்றவர் கைது

மார்த்தாண்டம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

குழித்துறை:

மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மார்த்தாண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, உண்ணாமலைக்கடை ஆயிரந்தெங்கு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சந்தோஷ் (வயது 39) என்பவருடைய வீட்டை சோதனை செய்தனர். அப்போது, அங்கு 80 மதுபாட்டில்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர், போலீசார் 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சந்தோசை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com