மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் முதியவர் பிணம்

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இன்று முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் முதியவர் பிணம்
Published on

மார்த்தாண்டம்:

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இன்று காலை ஒரு கடை முன்பு முதியவர் ஒருவர் படுத்து கிடந்தார். அவர் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் கடையின் உரிமையாளர் அவர் அருகில் சென்று எழுப்பினார். ஆனால் அந்த நபர் அசைவற்று கிடந்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இது பற்றி மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று பார்த்த போது அந்த நபர் இறந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரித்தனர். இதில்  இறந்து கிடந்த முதியவர் அருகே ஒரு பை இருந்தது. அதில் இருந்த துண்டு சீட்டில் கணபதி ஆசாரி, காப்புக்காடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com