முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த ராணுவ வீரர்

சுவாமிமலையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த ராணுவ வீரர் குறித்து போலீசில் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த ராணுவ வீரர்
Published on

சுவாமிமலை:

அரியலூர் மாவட்டம் மதனத்தூரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஷ் (வயது42). இவர் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே மாநிலத்தை சேர்ந்த ஸ்டெல்லாமேரிக்கும் (39) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன் -மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்கின்றனர். இதையடுத்து திருமண தகவல் மையம் மூலம் சுபாஷ்சந்திரபோஷ் வரன் தேடினார். அதில் மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து திருமணத்திற்காக சுபாஷ் சந்திரபோஷ் தஞ்சை மாவட்டம் சுவாமிமலை கோவிலுக்கு வந்தார்.

அங்கு அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே தகவல் அறிந்த ஸ்டெல்லாமெரி சுவாமிமலைக்கு வந்தார். ஆனால் அதற்குள் திருமணம் நடந்து முடிந்து விட்டது. இது குறித்து ஸ்டெல்லாமேரி சுவாமிமலை போலீசில் புகார் செய்தார். அதில் முறையாக விவாகரத்து செய்யாமலும், எனக்கு தெரியாமலும் 2-வதாக திருமணம் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com