திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆராய்ச்சி மாணவர் தற்கொலை

காதலி வி‌ஷம் குடித்ததால் ஆராய்ச்சி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

மதுரை:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் நடந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மதுரை அருகே உள்ள வாடிப்பட்டி ஆதனூரைச் சேர்ந்தவர் தினகரன் (வயது 62). இவரது மகன் தினேஷ் (31). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. (ஆராய்ச்சி) படித்து வருகிறார்.

இந்த நிலையில் தேவசேரியைச் சேர்ந்த பெண்ணுக்கும், தினேசுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகளில் தினேஷ் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த தகவல் தினேசின் காதலி சவுந்தரிக்கு (22) தெரியவந்தது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சவுந்தரி, தினேஷிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் தினேஷ் மறுத்து விட்டார்.

இதனால் விரக்தியடைந்த சவுந்தரி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

காதலி சவுந்தரி தற்கொலைக்கு முயன்ற தகவல் தெரிந்ததும் தினேசும் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் தினேஷை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com