திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் திடீர் தற்கொலை

இண்டூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அடிதடி வழக்கில் சிறைக்கு சென்று வந்ததால் இந்த சோக முடிவை எடுத்துள்ளார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட  வாலிபர் திடீர் தற்கொலை
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்த ராஜுவின் மகன் சக்திவேல் (வயது 23). இவர் கடந்த 7 ஆண்டுகளாக கோவையில் தங்கி இருந்து பெட்டிக்கடை நடத்தி வந்தார்.  இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த கொடியூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 

கடந்த 22-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் கோவை புலியகுளத்தில் நடந்த அடிதடி தகராறில் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை அறிந்த மணமகள் வீட்டார் திருமணத்தை பிப்ரவரி 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த இவர். ராஜா கொல்லஅள்ளியில்  தங்கி இருந்தார்.

ஜெயிலுக்கு சென்று வந்தவருக்கு பெண் கொடுப்பதா என்று மணமகள் வீட்டாரிடம் உறவினர்கள் கேட்டனர். இதனால் குழப்பமான சூழ்நிலை நிலவியது. 5-ந்தேதியும் திருமணம் நடக்குமா? என்பதில் சக்திவேலுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மனம் உடைந்த அவர் நேற்று அதே பகுதியில் முருகன் கோவில்அருகே உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இண்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com