மதுரையில் திருமணம் செய்வதாக இளம்பெண் பலாத்காரம்- வாலிபர் மீது வழக்கு

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மதுரை:

மதுரை வண்டியூர் ஏஞ்சல் நகரைச்சேர்ந்த இளம்பெண். அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்கும் தூத்துக்குடி கே.டி.சி.நகரைச் சேர்ந்த அருண்பிரதீப் என்பவருக்கும் கடந்தவருடம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு தனியாக சென்று வந்தோம். அப்போது அருண்பிரதீப் வலுக்கட்டாயமாக என்னை பலாத்காரம் செய்தார். இந்த நிலையில் திடீரென திருமணத்திற்கு அவர் மறுத்தார். என்னை ஏமாற்றி பலாத்காரம் செய்த அருண் பிரதீப் மற்றும் திருமணத்திற்கு தடையாக இருந்த அவரது தந்தை சந்திரசேகர், தாயார் ஆறுமுகக்கனி (50), சகோதரி அருணா(27), சகோதரியின் கணவர் தீலிப் (35) ஆகிய 5 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com