மதுரையில் திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு- வக்கீல் மீது வழக்கு

திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை கற்பழித்த வக்கீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு- வக்கீல் மீது வழக்கு
Published on

மதுரை:

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் தனபாலன். இவரது மகள் ஓவியா (வயது 25). வக்கீலான இவர், மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மதுரை வண்டியூர் பாண்டிக்கோவில் தெருவைச் சேர்ந்த வக்கீல் தேவக்குமாரும் (29) நானும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் நெருங்கி பழகினார். தற்போது பெற்றோரின் தூண்டுதலால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வக்கீல் தேவக்குமார், அவரது தந்தை விஜய நடராஜன் (60) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com