திருமண ஆசை காட்டி மாணவி பாலியல் பலாத்காரம்- பட்டதாரி வாலிபர் மீது வழக்கு

திருமண ஆசை காட்டி பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் பட்டதாரி வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமண ஆசை காட்டி மாணவி பாலியல் பலாத்காரம்- பட்டதாரி வாலிபர் மீது வழக்கு
Published on

பேரையூர்:

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள மேலப்பட்டியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகன் அசோக்குமார் (வயது 25), பி.எஸ்.சி. பட்டதாரி.

இவர், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த ஓராண்டாக காதலித்து வந்தார். பிளஸ்-1 படித்து வரும் அவரிடம் நெருங்கி பழகி உள்ளார்.

இந்த நிலையில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பட்டதாரி வாலிபர் அசோக்குமார், கடந்த 30-ந் தேதி மாணவியை ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அங்கு வைத்து மாணவிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தினார்.

பட்டதாரி வாலிபர் அசோக்குமார் தலைமறைவாகி விட்ட நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com