மேலூர் அருகே திருமண ஆசை காட்டி 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்

திருமண ஆசை காட்டி 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்ததாக ஓட்டல் ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர் அருகே திருமண ஆசை காட்டி 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்
Published on

மதுரை:

மேலூரை அடுத்த முசுண்டகிரிப்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிசாமி (வயது 27). இவர் விழுப்புரத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் ஆண்டிசாமி அதே பகுதியில் வசிக்கும் 9-ம் வகுப்பு மாணவியுடன் நெருங்கி பழகியுள்ளார். அப்போது திருமண ஆசை காட்டி அந்த சிறுமியை கற்பழித்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த மாணவி திருமணத்துக்கு வற்புறுத்தி உள்ளார். ஆனால் ஆண்டிசாமி திருமணத்துக்கு மறுத்து விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை அறிந்த ஆண்டிசாமி, தந்தை பாண்டி, தாய் மீனா, சகோதரர் சரவணன் மற்றும் உறவினர் ஜெயபிரகாஷ் ஆகிய 5 பேரும் மாணவியின் வீட்டுக்கு சென்று மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் துவரிமான் இந்திரா காலனியை சேர்ந்த சக்திவேல் மனைவி முத்துசெல்வி (வயது 34) இவர் சம்பவத்தன்று மதியம் அங்குள்ள வாழைத் தோட்டத்துக்கு புல் அறுக்க சென்று உள்ளார்.

அப்போது அதே பகுதியில் வசிக்கும் அழகுமலை (49) என்பவர் அவரை கையை பிடித்து இழுத்து கற்பழிக்க முயற்சி செய்து உள்ளார். முத்துச்செல்வி மறுக்கவே, நடந்ததை ‘வெளியே சொன்னால் நடப்பதே வேறு’ என்று மிரட்டிவிட்டு சென்றார். இது தொடர்பாக முத்துசெல்வி புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com