பென்னாகரம் அருகே திருமணமான நாளில் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை

திருமணமான அதே நாளிலேயே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பென்னாகரம் அருகே திருமணமான நாளில் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை
Published on

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஜெல்மாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் குமார் (வயது 29). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிப்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவரது மகள் சரண்யா (20) என்பவருக்கும் நேற்று காலை மணமகன் வீட்டில் திருமணம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு குமாருக்கும், சரண்யாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த காணப்பட்ட குமார் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டு கொண்டார். உடனே உறவினர்கள் அறையின் கதவை தட்டினார். ஆனால் அவர் நீண்ட நேரமாக தட்டியும் கதவை திறக்காததால் உறவினர்ள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை கண்ட மணமகள் சரண்யாவும், உறவினர்களும் குமாரின் உடலை பார்த்து கதறிஅழுதனர். 

இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குமார் என்ன காரணத்திற்காக? தூக்குபோட்டு கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com