திருமணம் தடைபட்டதால் காதலி வீட்டில் வாலிபர் தூக்கில் தொங்கினார்

நெட்டப்பாக்கம் அருகே திருமணம் தடைபட்டதால் வேதனை அடைந்த வாலிபர் காதலி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் தடைபட்டதால் காதலி வீட்டில் வாலிபர் தூக்கில் தொங்கினார்
Published on

சேதராப்பட்டு:

நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம் புதுகாலனியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மகன் விஜயராஜ் (வயது24). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். விஜயராஜ் சிறுவயதில் இருந்த போது அவரது பெற்றோர் பிரிந்து சென்று விட்டதால் விஜயராஜ் தனது தாய் மாமன் கங்காதுரை பராமரிப்பில் இருந்து வந்தார்.

இதற்கிடையே விஜயராஜ் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பள்ளிபருவத்தில் இருந்தே காதலித்து வந்தார். அந்த பெண்ணின் பெற்றோரும் தனது மகளை விஜயராஜிக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தனர். ஆனால் சில காரணங்களுக்காக திருமணம் தடைபட்டு கொண்டே சென்றது.

இதனால் விஜயராஜ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த இவர் நேற்று காதலி வீட்டுக்கு சென்றார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் காதலியின் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.

சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணின் பெற்றோர் வீட்டுக்கு வந்த போது அங்கு விஜயராஜ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து விஜயராஜை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜயராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து விஜயராஜின் தாய் மாமன் கங்காதுரை கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலி வீட்டில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com