அரச்சலூர் அருகே திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

அரச்சலூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஈரோடு:

அரச்சலூர் அடுத்த வெட்டு காட்டு வலசு, கஸ்தூரியா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 45). இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் சம்பவத்தன்று சிவகுமார் வீட்டில் இருந்தார். அவரது தந்தை தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவரது தந்தை வீட்டுக்கு வந்த போது கதவு உள்பக்கமாக தாழ் போடப்பட்டிருந்தது.

கதவை தட்டியும் பதில் வராததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சிவகுமார் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிவகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மனைவி பிரிந்த காரணத்தால் சிவகுமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துக் கொண்டாரா? என்பன போன்ற விவரம் தெரியவில்லை.

இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com