பாலக்கோடு அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் மர்ம மரணம்

பாலக்கோடு அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
இளம்பெண் மரணம்
இளம்பெண் மரணம்
Published on

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள கோணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி வினிதா (வயது 20). இவர்களுக்கு கனிஷ்கா ஸ்ரீ என்ற ஒரு வயது மகள் உள்ளார்.

இந்த நிலையில் முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால் வினிதா கோபித்துக்கொண்டு பாலக்கோடு அடுத்துள்ள மாரவாடி பகுதியில் உள்ள அவரது தாயார் சுமதி வீட்டிற்கு சென்று விடுவார். பின்னர் சுமதி வினிதாவை சமாதானம் செய்து வைத்து வீட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முருகன் மற்றும் வினிதாவிற்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த வினிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தகவல் அறிந்த வினிதாவின் தாய் சுமதி மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் எனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தார். இது குறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து வினிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com