வாக்களித்ததை உறுதி செய்ய அழியாத மைக்கு பதிலாக மார்க்கர் பென்: ஜனாதிபதி தேர்தலில் அறிமுகமாகிறது

தேர்தலில் வாக்களித்ததை உறுதி செய்ய அழியாத மைக்கு பதிலாத மார்க்கர் பென்னை பயன்படுத்தும் முறையை, வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் அறிமுகம் செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
வாக்களித்ததை உறுதி செய்ய அழியாத மைக்கு பதிலாக மார்க்கர் பென்: ஜனாதிபதி தேர்தலில் அறிமுகமாகிறது
Published on

இந்தியாவில் தேர்தல் என்பது கட்சிகளுக்கான ஒரு திருவிழாவாகவே கருதப்படுகிறது. தேர்தல் நாள் அறிவித்ததில் இருந்து முடிவு வெளியாகும் நாள் வரை கட்சி தொண்டர்கள் படு உற்சாகமாக பம்பரமாக சுழன்று வேலை செய்வார்கள். ஆரம்பத்தில், தேர்தல் நாளன்று வாக்குச் சீட்டுகளை பெட்டியில் போட்டு வந்தனர். அதன்பின், கால மாற்றத்துக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது அவை நடைமுறையில் இருந்து வருகின்றன.
 
தேர்தலில் ஓட்டு போடுபவர்களை கண்டறியும் வகையில் அவர்களின் கையில் அழியாத மை வைக்கப்பட்டு வந்தது. இதற்கான மை, மைசூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மைசூர் மகாராஜா சார்பில் நல்வாடி கிருஷ்ண ராஜா வாடியாரால் கடந்த 1937ல் தொடங்கப்பட்டது தான் மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் கம்பெனி. அன்று முதல் இன்றுவரை தேர்தல் பணிகளுக்காக அழியாத மையை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் கர்நாடக அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், அழியாத மைக்கு பதிலாக வரும் ஜனாதிபதி தேர்தலில் மார்க்கர் பென் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மைசூர் கம்பெனி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மைசூர் கம்பெனி தலைவர் வெங்கடேஷ் கூறுகையில், ’’தேர்தலில் வாக்கு அளித்தவரின் கையில் வைக்கப்படும் அழியாத மைக்கு மாற்றாக என்ன உபயோகிக்கலாம் என தேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது. மார்க்கர் பென்னை பயன்படுத்துவது குறித்து பரிசோதனை நடத்தியது. அதன் முடிவில் மார்க்கர் பென் திருப்தி அளித்ததால், அழியாத மைக்கு பதிலாக மார்க்கர் பென்னை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

முதல்கட்டமாக, வரும் ஜூலை 17ல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மார்க்கர் பென்னை பயன்படுத்தி கை விரலில் புள்ளி வைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com