மெரினா கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

மெரினா கடலில் குளித்த 2 மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெரினா கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
Published on

சென்னை:

மெரினாவில் கடலில் முழ்கி இளைஞர்களும், மாணவர்களும் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. விடுமுறை நாளான நேற்று மெரினா கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவிலம்பாக்கம் பகுதியில் இருந்து சிலகுடும்பத்தினர் மெரினா கடற்கரைக்கு வந்தனர். அவர்கள் எம்.ஜி.ஆர். சமாதி பின்புறம் அமர்ந்து கடற்கரையின் அழகை ரசித்துக்கொண்டு இருந்தனர். அப்போது ஆகாஷ்குமார் (14) தனுஷ் குமார்(14) ஆகிய இருவரும் கடற்கரையில் குளித்தனர். 9-ம் வகுப்பு மாணவர்களான இவர்கள் இருவரும் கடலில் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கினர்.

2 பேரையும் ராட்சத அலை கடலில் மூழ்கடித்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ரோந்து போலீசார் விரைந்து சென்று பொது மக்கள் உதவிவுடன் மாணவர்களை மீட்க முயன்றனர். ஆனால் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. அவர்களை அலை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது. இருவரும் கடலில் மூழ்கி பலியானார்கள். இதில் ஆகாஷ் குமாரின் உடல் சிறுது நேரத்திலேயே கரை ஒதுங்கியது. தனுஷ்குமாரின் உடலை தேடும் பணி நடந்து வருகிறது.

மெரினாவில் கடலில் மூழ்கி மாணவர்கள் உயிர் இழப்பதை தடுப்பதற்காக போலீசார் தீவிர முன் னேற்பாடுகளை செய்துள்ளனர். இருப்பினும் ஏதாவது ஒரு பகுதியில் மாணவர்கள் கடலில் மூழ்கி பலியாகிவிடுகிறார்கள். கடலில் வேகமாக செல்லக் கூடிய வாகனங்களில் போலீசார் சுற்றி வருகிறார்கள். மாணவர்கள் கடலில் மூழ்கினால் உடனடியாக அங்கு இந்த வாகனத்தில் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

போலீசார் இந்த மீட்பு நடவடிக்கைக்கு கடற்கரை ஓரமாக கடைகளை வைத்துள்ள வியாபாரி களும் உறுதுணையாக உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com