மெரினா-நீலாங்கரையில் கடலில் மூழ்கி 3 பேர் பலி

மெரினா-நீலாங்கரையில் கடலில் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலில் மூழ்கி பலி
கடலில் மூழ்கி பலி
Published on

சென்னை:

நீலாங்கரை அருகே உள்ள அக்கரையில் நேற்று காலை தனியார் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் குளித்தனர்.

அப்போது, விஷ்ணு, சசிக்குமார் ஆகிய 2 மாணவர்கள் கடலில் மூழ்கினர். மற்ற மாணவர்கள் 2 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில் மாணவர் சசிக்குமார் மீட்கப்பட்டார். ஆனால் விஷ்ணு கடலில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முடியவில்லை.

கடலில் மூழ்கி பலியான விஷ்ணுவின் உடல் சிறிது நேரத்திலேயே கரை ஒதுங்கியது. இது பற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மெரினா கடற்கரையில் காந்தி சிலை பின்புறம் 17 வயது வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது. கடலில் மூழ்கி பலியான அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அண்ணாசதுக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் உடலும் கரை ஒதுங்கியுள்ளது. அவர் யார்? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com