தோள்பட்டை காயத்தால் இத்தாலி ஓபனில் இருந்து விலகினார் மரியா ஷரபோவா

தோள்பட்டை காயத்தால் ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். #ItalyOpen
தோள்பட்டை காயத்தால் இத்தாலி ஓபனில் இருந்து விலகினார் மரியா ஷரபோவா
Published on

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 13-ந்தேதி தொடங்கி 19-வது தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் இருந்து ரஷியாவின் முன்னணி வீராங்கனையான ஷரபோவா தோள்பட்டை காயத்தால் விலகியுள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பார்கள் தெரிவித்துள்ளனர்.

அவருக்குப் பதிலாக ஸ்லோவாகியாவைச் சேர்ந்த விக்டோரியா குஸ்மோவா சேர்க்கப்பட்டுள்ளார். ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஷரபோவா, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து விளையாடவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் வலது கை தோள்பட்டையில் லேசாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் பிரெஞ்ச் ஓபனில் விளையாடுவாரா? என்பது சந்தேகம்தான்.

ஷரபோவா 2011, 2012 மற்றும் 2015-ல் இத்தாலி ஓபனை வென்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com