

ராஞ்சி:
சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள்.
இதனால் மாவோயிஸ்டுகளை கண்டுபிடித்து வேட்டையாடும் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்) ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தேடுதல் வேட்டையை தடுக்கும் திட்டமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10 சிறுவர்களை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கடத்தி சென்று உள்ளனர்.
கார்வா மாவட்டம் பாண்டிபாரிய போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தில் இளம் சிறுவர்களை மாவோயிஸ்டுகள் கடத்தி சென்று உள்ளனர்.
இதனால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 10 சிறுவர் களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
10 சிறுவர்களை தேடி சென்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மாவோயிஸ்டுகள் கண்ணி வெடியில் சிக்கினர். இதில் 4 போலீசார் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.