பீகார்: பழங்குடி மக்கள் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் - 3 பேர் பலி

பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
பீகார்: பழங்குடி மக்கள் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் - 3 பேர் பலி
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள கும்கார்டாரி கிராமத்தில் நேற்று பின்னிரவு அனைவரும் உறங்கி கொண்டிருந்தபோது வீச்சரிவாள், துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் புகுந்தனர்.

அங்குள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்த அந்த கும்பல் உறக்கத்தில் இருந்த மீனா தேவி (54), அவருடைய மகன் பஜ்ரான்ஜி கோடா(46) மற்றும் கோடாவின் சகோதரர் சியோ கோடா(46) ஆகியோர் மீது சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த தாக்குதலில் அவர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் இன்று தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com