கியூபா நாட்டில் 43 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் பிரதமர் நியமனம்

கியூபா நாட்டில் ஒழிக்கப்பட்ட பிரதமர் பதவிக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில் 43 ஆண்டுகளுக்கு பின்னர் மானுவேல் மர்ரேரோ-வை புதிய பிரதமராக அதிபர் மிகுவேல் டயஸ் கனேல் நியமித்துள்ளார்.
மானுவேல் மர்ரேரோ
மானுவேல் மர்ரேரோ
Published on

வட அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய தீவுநாடான கியூபாவில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அந்நாட்டின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ ஆட்சி செய்தபோது 1976-ம் ஆண்டில் பிரதமர் பதவி ஒழிக்கப்பட்டது. அவருக்கு பின்னர் அதிபராக பதவியேற்ற ரவுல் காஸ்ட்ரோ காலத்திலும் இதேநிலை நீடித்தது.

இந்நிலையில், 43 ஆண்டுகளாக வழக்கொழிக்கப்பட்ட  பிரதமர் பதவிக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில் 24-2-2019 அன்று கியூபா பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com