ஆன்லைன் லாட்டரி விற்ற 7 பேர் கைது

மன்னார்குடியில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

மன்னார்குடி:

மன்னார்குடியில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் மன்னார்குடி பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த மன்னார்குடி பகுதியை சேர்ந்த நிஜந்தன்(வயது32), மாரிமுத்து(42), கென்னடி(40), முரளி(32), ராஜேந்திரன்(47), கார்த்தி(36), முருகன்பாபு(35) ஆகிய 7 பேரை கைது செய்து மன்னார்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com