மன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி

மகளின் படிப்புக்காக சேமித்த பணத்தில் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய சலூன் கடைக்காரருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்
மதுரை மோகன், பிரதமர் மோடி
மதுரை மோகன், பிரதமர் மோடி
Published on

மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் மேலசிருபோத்து கிராமத்தில் பிறந்த மோகன். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நெல்லிதோப்பு பகுயியில் வசித்து வருகிறார். ‘‘நான் உதவி வழங்குவதை கேள்வி பட்டு ஏராளமான மக்கள் என் வீட்டு கதவை தட்ட தொடங்கியுள்ளனர். என்னிடம் இருக்கும் பணத்தை வைத்து உதவிகளை வழங்கி வந்தேன். மேலும் பணம் தேவைபட்டால் எனது மனைவியின் நகைகளை வைத்து, எனது இடத்தை விற்றும் உதவிகள் செய்வேன். உதவி செய்வதால் இழந்த பணத்தை என் வாடிக்கையாளர்களிடம் இருந்து மீண்டும் சாம்பாதித்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவித்திருந்தார்.

மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்துளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com