அருண் ஜெட்லி உடலுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் அஞ்சலி

முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சோனியா காந்தி அஞ்சலி
சோனியா காந்தி அஞ்சலி
Published on

புதுடெல்லி:

முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி (67), உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

டெல்லியில் வைக்கப்பட்டு உள்ள அருண் ஜெட்லி உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்பட பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், காஷ்மீரில் இருந்து டெல்லி திரும்பிய ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அருண் ஜெட்லி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்,

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com